இஹ்ராம் நிலையில் இருந்த ஒருவரின் ஒட்டகம் அவரின் கழுத்தை முறித்து, அவர் இறந்துவிட்டதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். அதன்பேரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவரை இலந்தை (இலைகள்) கலந்த நீரால் குளிப்பாட்டுங்கள், மேலும் அவரின் இரண்டு (துண்டு) ஆடைகளில் கஃபனிடுங்கள், மேலும் அவரின் தலையையோ முகத்தையோ மூடாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்.