இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2500ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ ضَحَايَا، فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ ضَحِّ بِهِ أَنْتَ ‏ ‏‏.‏
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் அறுத்துப் பலியிடுவதற்காக அவர்களிடையே பங்கிடுவதற்கு என சில ஆடுகளை உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அப்போது, ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை உமது சார்பாக நீர் அறுத்துப் பலியிடுவீராக” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5555ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى صَحَابَتِهِ ضَحَايَا، فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ ضَحِّ أَنْتَ بِهِ ‏ ‏‏.‏
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள், குர்பானி கொடுப்பதற்காகத் தமது தோழர்களிடையே பங்கிடுமாறு அவரிடம் ஆடுகளைக் கொடுத்தார்கள். (அவற்றைப் பங்கிட்ட பின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியிருந்தது. அதை அவர் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதை நீர் குர்பானி கொடுப்பீராக!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1965 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ
يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
أَعْطَاهُ غَنَمًا يَقْسِمُهَا عَلَى أَصْحَابِهِ ضَحَايَا فَبَقِيَ عَتُودٌ فَذَكَرَهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم فَقَالَ ‏ ‏ ضَحِّ بِهِ أَنْتَ ‏ ‏ ‏.‏ قَالَ قُتَيْبَةُ عَلَى صَحَابَتِهِ ‏.‏
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது தோழர்களுக்கு மத்தியில் குர்பானிப் பிராணிகளாகப் பங்கிட்டுக் கொடுப்பதற்காக ஆடுகளை அவரிடம் கொடுத்தார்கள். (அவற்றை பங்கிட்ட பிறகு) ஓர் ஆண்டு நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று மீதமிருந்தது. அதுபற்றி அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள் (ஸல்), "அதை நீர் அறுத்துப் பலியிடுவீராக" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح