நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் நுழைந்தார்கள்; அதன் வாசலைக் காக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அப்போது ஒரு மனிதர் வந்து அனுமதி கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதியுங்கள்; மேலும், அவருக்குச் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறுங்கள்" என்று கூறினார்கள்.
பார்த்தால், அவர் அபூ பக்ர் (ரழி) அவர்கள்.
பிறகு உமர் (ரழி) அவர்கள் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவரை அனுமதியுங்கள்; மேலும், அவருக்குச் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறுங்கள்” என்று கூறினார்கள்.
பிறகு உஸ்மான் (ரழி) அவர்கள் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவரை அனுமதியுங்கள்; மேலும், அவருக்குச் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறுங்கள்” என்று கூறினார்கள்.