"நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம் கழுதைப் புலிகள் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், அவற்றை உண்ணலாம் என்று எனக்குக் கூறினார்கள். நான், "அது வேட்டைப் பிராணி அல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்' என்றார்கள். நான், 'இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்' என்றார்கள்."