حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَأَلَهُ عَنِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ، فَقَالَ لاَ قَدْ كُنَّا زَمَانَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نَجِدُ مِثْلَ ذَلِكَ مِنَ الطَّعَامِ إِلاَّ قَلِيلاً، فَإِذَا نَحْنُ وَجَدْنَاهُ لَمْ يَكُنْ لَنَا مَنَادِيلُ، إِلاَّ أَكُفَّنَا وَسَوَاعِدَنَا وَأَقْدَامَنَا، ثُمَّ نُصَلِّي وَلاَ نَتَوَضَّأُ.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், தீயில் சமைக்கப்பட்ட உணவை (உண்டபின்) உளூச் செய்வது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இல்லை (உளூச் செய்யத் தேவையில்லை). நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதுபோன்ற உணவை நாங்கள் அரிதாகவே பெறுவோம். அவ்வாறு நாங்கள் அதைப்பெற்றால், எங்கள் உள்ளங்கைகள், முன்கைகள் மற்றும் பாதங்களைத் தவிர (வாயையும் கைகளையும் துடைத்துக்கொள்ள) எங்களிடம் கைக்குட்டைகள் இருந்ததில்லை. பிறகு நாங்கள் (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுவோம்" என்று கூறினார்கள்.