அபூ சயீத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் உணவை முடித்ததும் கூறினார்கள்:
"அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா, வஸகானா, வஜஅலனா முஸ்லிமீன்."
(பொருள்: "எங்களுக்கு உணவளித்து, பானம் புகட்டி, எங்களை முஸ்லிம்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (உரித்தானது, ஏனெனில் இஸ்லாம் என்பது மிகப்பெரிய அருட்கொடை).")
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் உண்ணும்போதும் அல்லது பருகும்போதும், “எங்களுக்கு உணவளித்து, பருகக் கொடுத்து, எங்களை முஸ்லிம்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்துலில்லாஹ், அல்லதீ அத்அமனா, வ ஸகானா, வ ஜஅலனா முஸ்லிமீன்)” என்று கூறுவார்கள்.