இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2557ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ ‏ إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَلْيُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاَجَهُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாளர் உணவைக் கொண்டு வந்தால், அவரைத் தம்முடன் அமரவைக்காவிட்டால், ஒரு கவளம் அல்லது இரு கவளங்களாவது, அல்லது ஒரு பகுதி (உணவு) அல்லது இரு பகுதிகள் (உணவு) அவருக்கு எடுத்துக் கொடுக்கட்டும்! ஏனெனில் அவரே அதைத் தயாரித்து (சமைத்து) இருக்கிறார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5460ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدٍ ـ هُوَ ابْنُ زِيَادٍ ـ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ فَلْيُنَاوِلْهُ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، أَوْ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ حَرَّهُ وَعِلاَجَهُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் உணவைக் கொண்டுவந்தால், அப்பணியாளரைத் தம்முடன் அமரவைக்கவில்லை என்றாலும், அவருக்கு ஒரு பகுதி உணவையோ அல்லது இரு பகுதி உணவுகளையோ, அல்லது ஒரு கவளத்தையோ அல்லது இரு கவளங்களையோ எடுத்து அவர் கொடுக்கட்டும். ஏனெனில், அவர்தான் அதன் வெப்பத்தையும் (உணவு) தயாரிக்கும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح