(மக்களுக்கு) வறட்சி ஏற்படும்போதெல்லாம் உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்கள் வாயிலாக (அல்லாஹ்விடம்) மழை வேண்டக்கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள்:
(யா அல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் முன்னிலைப்படுத்தி (மழை) வேண்டினோம்; நீ எங்களுக்கு மழையை பொழிந்தாய். மேலும், நாங்கள் எங்கள் நபியின் சிறிய தந்தையை உன்னிடம் முன்னிலைப்படுத்தி வேண்டுகிறோம்; எனவே எங்களுக்கு நீ மழையை பொழிவாயாக!)
என்று கூறுவார்கள். உடனே அவர்களுக்கு மழை பொழிவிக்கப்படும்.