அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அந்தப் பருவத்தில்) முதன்முதலில் விளைந்த கனி கொண்டுவரப்பட்டபோது அவர்கள் கூறினார்கள்:
(யா அல்லாஹ்! எங்கள் நகரத்திலும், எங்கள் கனிகளிலும், எங்கள் முத் அளவிலும், எங்கள் ஸாஃ அளவிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக; பரக்கத்தின் மீது பரக்கத்தை அருள்வாயாக).
பிறகு அதை அவர்கள் அங்கிருந்த பிள்ளைகளிலேயே சிறியவருக்குக் கொடுப்பார்கள்.