حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَبَلَةُ بْنُ سُحَيْمٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَقْرُنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ جَمِيعًا، حَتَّى يَسْتَأْذِنَ أَصْحَابَهُ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
'ஒருவர் தம் தோழர்களிடம் அனுமதி பெறும் வரை, இரண்டு பேரீச்சம்பழங்களை (ஒரே நேரத்தில்) ஒன்றாகச் சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.'
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ،
عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ
يَقْرِنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ حَتَّى يَسْتَأْذِنَ أَصْحَابَهُ .
ஜபலா இப்னு ஸுஹைம் (ரஹ்) கூறினார்: நான் இப்னு உமர் (ரழி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் தம் தோழர்களின் அனுமதியின்றி இரண்டு பேரீச்சம்பழங்களை (ஒரே நேரத்தில்) ஒன்றாகச் சாப்பிடுவதைத் தடுத்தார்கள்' என்று கூறக் கேட்டேன்.