என் உற்ற நண்பர் (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுரை வழங்கியதாக அபூ தர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நீ வெட்டப்பட்டாலும், எரிக்கப்பட்டாலும் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதே. கடமையாக்கப்பட்ட எந்தவொரு தொழுகையையும் வேண்டுமென்றே விட்டுவிடாதே, ஏனெனில் எவர் அதை வேண்டுமென்றே விடுகிறாரோ, அவரிடமிருந்து அல்லாஹ்வின் பாதுகாப்பு நீங்கிவிடும். மேலும், மது அருந்தாதே, ஏனெனில் அது எல்லாத் தீமைகளுக்கும் திறவுகோலாகும்.”