இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2004 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدٍ،
أَبِي عُمَرَ الْبَهْرَانِيِّ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
يُنْتَبَذُ لَهُ أَوَّلَ اللَّيْلِ فَيَشْرَبُهُ إِذَا أَصْبَحَ يَوْمَهُ ذَلِكَ وَاللَّيْلَةَ الَّتِي تَجِيءُ وَالْغَدَ وَاللَّيْلَةَ الأُخْرَى
وَالْغَدَ إِلَى الْعَصْرِ فَإِنْ بَقِيَ شَىْءٌ سَقَاهُ الْخَادِمَ أَوْ أَمَرَ بِهِ فَصُبَّ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இரவின் ஆரம்பத்தில் 'நபீத்' தயாரிக்கப்படும். அவர்கள் அதனை (தயாரிக்கப்பட்டதற்கு) மறுநாள் காலையிலும், (அதே) இரவிலும், (அதற்கு அடுத்த) பகலிலும், (அதற்குப் பின்னான) இரவிலும், (மூன்றாம்) பகலில் அஸ்ர் வரையிலும் அருந்துவார்கள். அதில் ஏதேனும் மீதமிருந்தால், அவர்கள் அதைத் தமது பணியாளருக்குப் பருகக் கொடுப்பார்கள்; அல்லது அதை ஊற்றிவிடும்படி கட்டளையிடுவார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح