حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، وَأَبُو نُعَيْمٍ قَالاَ حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، قَالَ أَخْبَرَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ أَنَسٌ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ ثَلاَثًا.
துமாமா பின் அப்துல்லாஹ் அறிவித்தார்கள்:
அனஸ் (ரழி) அவர்கள் (நீர் அருந்தும்போது) பாத்திரத்திலிருந்து (வாயை அகற்றி) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு விடுவார்கள் என்றும், நபி (ஸல்) அவர்கள் (நீர் அருந்தும்போது) மூன்று முறை (பாத்திரத்திலிருந்து வாயை அகற்றி) மூச்சு விடுவார்கள் என்றும் (உறுதிபடக்) கூறுவார்கள்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ.
அனஸ் (ரழி) அவர்கள் நறுமணப் பொருளை (யாரேனும் கொடுத்தால்) ஒருபோதும் நிராகரித்ததில்லை. மேலும், "நபி (ஸல்) அவர்கள் நறுமணப் பொருளை (யாரேனும் கொடுத்தால்) ஒருபோதும் நிராகரித்ததில்லை" என்று அவர்கள் கூறுவார்கள்.
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَزْرَةَ،
بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பானம்) அருந்தும்போது மூன்று முறை மூச்சு விடுவார்கள் (அதாவது, அவர்கள் மூன்று மிடறுகளாகப் பிரித்து அருந்துவார்கள், ஒவ்வொரு மிடறுக்கும் இடையில் பாத்திரத்திலிருந்து வாயை எடுத்து மூச்சு விடுவார்கள்).