இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1439சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ هُبَيْرَةَ، حَدَّثَنَا أَبُو مَكِينٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَادَ رَجُلاً فَقَالَ ‏"‏ مَا تَشْتَهِي ‏"‏ ‏.‏ قَالَ أَشْتَهِي خُبْزَ بُرٍّ ‏.‏ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَنْ كَانَ عِنْدَهُ خُبْزُ بُرٍّ فَلْيَبْعَثْ إِلَى أَخِيهِ ‏"‏ ثُمَّ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِذَا اشْتَهَى مَرِيضُ أَحَدِكُمْ شَيْئًا فَلْيُطْعِمْهُ ‏"‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு மனிதரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது அவரிடம், “நீர் எதை விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் கோதுமை ரொட்டியை விரும்புகிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “யாரிடமாவது கோதுமை ரொட்டி இருந்தால், அவர் அதைத் தன் சகோதரருக்கு (அதாவது அந்த நோயாளிக்கு) அனுப்பட்டும்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவருடைய நோயாளி எதையேனும் (சாப்பிட) விரும்பினால், அவருக்கு அதை உண்ணக் கொடுங்கள்” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)