நான் ஆயிஷா (ரழி) அவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் யமனில் தயாரிக்கப்பட்ட (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்) கரடுமுரடான ஒரு கீழாடையையும், 'முலப்பதா' எனப்படும் துணியால் ஆன ஆடைகளையும் எங்களிடம் கொண்டு வந்து காட்டி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இரண்டு ஆடைகளில்தான் காலமானார்கள் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினார்கள்.