ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திக்ர்களில் சிறந்தது ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாருமில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்)’ என்பதும், துஆக்களில் சிறந்தது ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே (அல்ஹம்துலில்லாஹ்)’ என்பதுமாகும்,” என்று கூறினார்கள்.