அபூ மஃமர் அறிவித்தார்கள்: ஒருவர் ஆட்சியாளர்களில் ஒரு ஆட்சியாளரை புகழ்ந்தார். அப்போது மிக்தாத் (ரழி) அவர்கள் அந்தப் புகழ்ந்தவர் மீது புழுதியை வாரி இறைக்க ஆரம்பித்தார்கள், மேலும் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதிகமாகப் புகழ்பவர்களின் முகங்களில் புழுதியை வாரி இறைக்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.