அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "நீங்கள் மூவராக இருக்கும்போது, உங்கள் தோழரை விட்டுவிட்டு (அவரைச் சேர்க்காமல்) இருவர் இரகசியமாகப் பேச வேண்டாம். ஏனெனில், அது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்."