அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைக் கனவில் கண்டவர் உண்மையில் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் தோன்ற மாட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
யார் என்னைக் கனவில் கண்டாரோ, அவர் உண்மையில் என்னையே கண்டார், ஏனெனில் ஷைத்தான் என் உருவத்தை எடுக்க முடியாது.