இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2923 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ أَبُو
بَكْرٍ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، ح وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، كِلاَهُمَا عَنْ
سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ إِنَّ بَيْنَ
يَدَىِ السَّاعَةِ كَذَّابِينَ ‏ ‏ ‏.‏ وَزَادَ فِي حَدِيثِ أَبِي الأَحْوَصِ قَالَ فَقُلْتُ لَهُ آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ ‏.‏
ஜாபிர் பின் ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக கியாமத் நாளுக்கு முன் பெரும் பொய்யர்கள் (தங்களை நபிமார்கள் என்றோ, இறைத்தூதர்கள் என்றோ கூறிக்கொண்டு) தோன்றுவார்கள்" எனக் கூற நான் கேட்டேன். அபூ அஹ்வஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (பின்வரும்) கூடுதல் வார்த்தைகள் உள்ளன: (ஜாபிர் பின் ஸமுராவிடம்) நான், 'நீங்கள் இதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?' எனக் கேட்டேன். அதற்கு அவர் (ஜாபிர் பின் ஸமுரா), 'ஆம்' என்றார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح