ஹுதைஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, அவர்கள், “இஸ்லாத்தை மொழிபவர்கள் (முஸ்லிம்கள்) எத்தனை பேர் என்று எனக்காகக் கணக்கெடுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறுநூறுக்கும் எழுநூறுக்கும் இடையில் இருக்கும்போது எங்களைக் குறித்து நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “நிச்சயமாக நீங்கள் அறியமாட்டீர்கள்; ஒருவேளை நீங்கள் சோதிக்கப்படலாம்” என்று கூறினார்கள். (ஹுதைஃபா (ரழி) கூறினார்:) அவ்வாறே நாங்கள் சோதிக்கப்பட்டோம்; எந்த அளவிற்கென்றால், எங்களில் ஒருவர் மறைவாகவே அன்றி தொழ முடியாத நிலை ஏற்பட்டது.