அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, ஒரு மனிதன் ஒரு கப்றைக் கடந்து சென்று, அதன் மீது புரண்டு, மார்க்கத்தின் காரணத்தினால் அல்லாமல், கடுமையான சோதனையின் காரணமாக, 'இந்த கப்றில் உள்ளவரின் இடத்தில் நான் இருந்திருக்கக் கூடாதா (அதாவது, நான் இறந்திருக்கக் கூடாதா)?' என்று ஆசைப்படும் வரை இந்த உலகம் அழியாது.