حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَامَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ ذَكَرَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا عِنْدَهُ الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَلاَ تَسْمَعُونَ أَلاَ تَسْمَعُونَ إِنَّ الْبَذَاذَةَ مِنَ الإِيمَانِ إِنَّ الْبَذَاذَةَ مِنَ الإِيمَانِ . يَعْنِي التَّقَحُّلَ . قَالَ أَبُو دَاوُدَ هُوَ أَبُو أُمَامَةَ بْنُ ثَعْلَبَةَ الأَنْصَارِيُّ .
அபூஉமாமா இல்யாஸ் இப்னு தஃலபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (ரழி), அவருக்கு முன்னால் இவ்வுலக (ஆடம்பரத்தைப்) பற்றி குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கேளுங்கள், கேளுங்கள்! பழைய ஆடைகளை அணிவது ஈமானின் (நம்பிக்கையின்) ஒரு பகுதியாகும், பழைய ஆடைகளை அணிவது ஈமானின் (நம்பிக்கையின்) ஒரு பகுதியாகும்.
அபூதாவூத் கூறினார்கள்: இவர் அபூ உமாமா பின் தஃலபத் அல்-அன்சாரி (ரழி) ஆவார்.
وعن أبي أمامة إياس بن ثعلبة الأنصاري الحارثي رضي الله عنه قال: ذكر أصحاب رسول الله صلى الله عليه وسلم يوماً عنده الدنيا، فقال رسول الله صلى الله عليه وسلم : “ألا تسمعون؟ ألا تسمعون؟ إن البذاذة من الإيمان، إن البذاذة من الإيمان" يعني: التقحل. ((رواه أبو داود)).
"البذاذة" بالباء الموحدة والذالين المعجمتين، وهي رثاثة الهيئة، وترك فاخر اللباس. وأما "التقحل" فبالقاف والحاء، قال أهل اللغة: المتقحل: هو الرجل اليابس الجلد من خشونة العيش، وترك الترفة.
அபூ உமாமா பின் ஸஃலபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (ரழி) அவருக்கு (ஸல்) முன்னால் இவ்வுலக வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் (ஸல்) கூறினார்கள், "நீங்கள் செவியுறவில்லையா? நீங்கள் செவியுறவில்லையா? எளிமை ஈமானில் உள்ளதாகும், எளிமை ஈமானில் உள்ளதாகும்."