அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பது யாதெனில், உஹது மலை எனக்குத் தங்கமாக ஆவதும், அதிலிருந்து என் மீதுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக நான் ஒதுக்கி வைக்கும் ஒரு தீனாரைத் தவிர வேறு எந்த தீனாரும் மூன்று இரவுகள் முடிவதற்குள் என்னிடம் மீதம் இல்லாமல் போவதுமே ஆகும்.