وعن عبيد الله بن محصن الأنصاري الخطمي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أصبح منكم آمنا في سربه، معافى في جسده، عنده قوت يومه، فكأنما حيزت له الدنيا بحذافيرها ((رواه الترمذي وقال: حديث حسن)).
உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் தனது குடும்பத்தினரிடையே பாதுகாப்புடனும், உடல் நலத்துடனும், அன்றைய தினத்துக்குரிய உணவுடனும் காலையை அடைகிறாரோ, அவருக்கு இவ்வுலகம் அனைத்தும் ஒன்று திரட்டிக் கொடுக்கப்பட்டதைப் போன்றதாகும்."
அத்-திர்மிதி அவர்கள் இதை ஹதீஸ் ஹஸன் என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.