நுஃமான் (ரலி) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தியபோது கூறியதாவது:
(ஹஜ்ரத்) உமர் (ரலி) அவர்கள், இவ்வுலகப் பொருட்களிலிருந்து மக்களுக்குக் கிடைத்தவற்றைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன்; அவர்கள் தம் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கு மட்டமான பேரீச்சம்பழத்தைக் கூட பெற முடியாமல் நாள் முழுவதும் (பசியால்) துடித்துக் கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்கள்.