நான் உக்பா இப்னு கஸ்வான் (ரழி) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த ஏழு பேரில் ஏழாவது ஆளாக என்னைக் கண்டேன். எங்கள் வாயின் ஓரங்கள் புண்ணாகும் வரை ஹுப்லா (ஒரு காட்டு மரம்) மரத்தின் இலைகளைத் தவிர எங்களுக்கு உண்பதற்கு எதுவும் இருக்கவில்லை.