கஃபு பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக இறைநம்பிக்கையாளரின் ஆன்மா (மரணத்திற்குப் பின்), உயிர்த்தெழும் நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் அதனை அவனது உடலுக்குத் திரும்ப அனுப்பும் வரை, சுவர்க்கத்தின் மரங்களில் இருக்கும் ஒரு பறவையாகும்."