நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உயர்ந்தவனும் மகிமை மிக்கவனுமாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளான "பூமி வேறு பூமியாகவும், வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்படும் அந்நாளில் (அத்தியாயம் 14, வசனம் 48)" (என்பது குறித்து), "(அல்லாஹ்வின் தூதர் அவர்களே!) அந்நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்கள் சிராத் மீது இருப்பார்கள்" என்று கூறினார்கள்.