நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரழி) அவர்களிடம், "கதீஜா (ரழி) அவர்களுக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை உண்டு என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "ஆம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கதீஜா (ரழி) அவர்களுக்கு, சொர்க்கத்தில் எந்த இரைச்சலும் எந்தச் சோர்வும் இல்லாத, முத்தாலான ஒரு மாளிகையைக் கொண்டு நற்செய்தி கூறினார்கள்."