ஜரீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அறியாமைக்காலத்தில் 'துல்-கலஸா' என்று அழைக்கப்படும் ஒரு கோவில் இருந்தது. அது 'யமனியக் கஅபா' என்றும் 'ஷாமியக் கஅபா' என்றும் அழைக்கப்பட்டு வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "'துல்-கலஸா', 'யமனியக் கஅபா' மற்றும் 'ஷாமியக் கஅபா' ஆகியவற்றிடமிருந்து எனக்கு நீங்கள் நிம்மதி அளிக்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். எனவே, நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்று ஐம்பது பேருடன் அதன் பக்கம் விரைந்தேன். நாங்கள் அதை உடைத்தெறிந்தோம்; அங்கு நாங்கள் யாரைக் கண்டோமோ அவர்களைக் கொன்றோம். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (இச்செய்தியைத்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் அஹ்மஸ் குலத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள்.