அதா பின் அபீ ரபாஹ் கூறியதாவது:
உபைத் பின் உமைர் அவர்களும் நானும் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவர் (உபைத்) ஹிஜ்ரத் பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள் (ஆயிஷா) கூறினார்கள்: "இன்று ஹிஜ்ரத் என்பது இல்லை. முன்னர், ஓர் இறைநம்பிக்கையாளர் தமது மார்க்கம் சம்பந்தமாக சோதனைக்குள்ளாக்கப்படுவோமோ என்று அஞ்சி, தம் மார்க்கத்துடன் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களிடமும் தப்பி ஓடுவது வழமையாக இருந்தது. இன்றோ அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றியளித்து விட்டான்; எனவே, ஓர் இறைநம்பிக்கையாளர் தான் விரும்பிய இடத்தில் தமது இறைவனை வணங்கலாம். ஆனால், ஜிஹாத்தும், (நற்)செயல்களுக்கான எண்ணங்களுமே உண்டு."