இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3851ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ ابْنُ أَرْبَعِينَ، فَمَكَثَ ثَلاَثَ عَشْرَةَ سَنَةً، ثُمَّ أُمِرَ بِالْهِجْرَةِ، فَهَاجَرَ إِلَى الْمَدِينَةِ، فَمَكَثَ بِهَا عَشْرَ سِنِينَ، ثُمَّ تُوُفِّيَ صلى الله عليه وسلم‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயதாக இருந்தபோது (முதல்) வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டது. பின்னர் அவர்கள் (மக்காவில்) பதிமூன்று ஆண்டுகள் தங்கினார்கள். பின்னர் ஹிஜ்ரத் செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்கள். அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கு பத்து ஆண்டுகள் தங்கினார்கள். பின்னர் (அவர்கள்) மரணமடைந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح