وعن نافع أن عمر بن الخطاب رضي الله عنه كان فرض للمهاجرين الأولين أربعة آلاف وفرض لابنه ثلاثة آلاف وخمسمائة، فقيل له: هو من المهاجرين فلم نقصته؟ فقال: إنما هاجر به أبوه، يقول: ليس هو كمن هاجر بنفسه” ((رواه البخاري))
நாஃபிஉ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) அவர்கள் ஆரம்பகாலத்தில் ஹிஜ்ரத் செய்த ஒவ்வொருவருக்கும் நான்காயிரம் திர்ஹம்களை உதவித்தொகையாக நிர்ணயித்தார்கள். ஆனால், தமது மகனுக்கு மூவாயிரத்து ஐநூறு (திர்ஹம்களை) மட்டுமே நிர்ணயித்தார்கள். அவர்களிடம், "அவரும் (ஆரம்பகாலத்தில்) ஹிஜ்ரத் செய்தவர்தானே? ஏன் அவருக்குக் குறைந்த தொகையை நிர்ணயித்தீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அவருடைய தந்தைதான் அவரைத் தம்முடன் அழைத்து வந்தார். அவர் தானாகவே ஹிஜ்ரத் செய்தவரைப் போன்றவர் அல்லர்" என்று கூறினார்கள்.