حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَابْنُ أُمِّ مَكْتُومٍ فَجَعَلاَ يُقْرِئَانِنَا الْقُرْآنَ، ثُمَّ جَاءَ عَمَّارٌ وَبِلاَلٌ وَسَعْدٌ ثُمَّ جَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي عِشْرِينَ ثُمَّ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَا رَأَيْتُ أَهْلَ الْمَدِينَةِ فَرِحُوا بِشَىْءٍ فَرَحَهُمْ بِهِ، حَتَّى رَأَيْتُ الْوَلاَئِدَ وَالصِّبْيَانَ يَقُولُونَ هَذَا رَسُولُ اللَّهِ قَدْ جَاءَ. فَمَا جَاءَ حَتَّى قَرَأْتُ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} فِي سُوَرٍ مِثْلِهَا.
அல்-பரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (மதீனாவிற்கு) எங்களிடம் முதன்முதலில் வந்தவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்களும் இப்னு உம்மி மக்தூம் (ரழி) அவர்களும் ஆவார்கள்; அவர்கள் எங்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். பிறகு அம்மார் (ரழி), பிலால் (ரழி), ஸஅத் (ரழி) ஆகியோர் வந்தார்கள். அதன்பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள் இருபது (ஆண்கள்) கொண்ட ஒரு குழுவினருடன் வந்தார்கள்; அதன்பின் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். மதீனா வாசிகள் அன்னாரின் வருகையால் மகிழ்ச்சியடைந்தது போல் வேறு எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு மகிழ்ச்சியடைந்து நான் பார்த்ததே இல்லை; எந்தளவுக்கு என்றால், இளம் பெண்களும் சிறுவர் சிறுமியரும் கூட, "இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வந்துவிட்டார்கள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா’வையும் மேலும் அது போன்ற மற்ற அத்தியாயங்களையும் கற்றுக் கொள்ளும் வரை, நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வரவில்லை.