حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقْتُلُ الْحَيَّاتِ. فَحَدَّثَهُ أَبُو لُبَابَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ الْبُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا.
நாஃபிஃ அவர்கள் அறிவித்தார்கள்:
இப்னு உமர் (ரழி) அவர்கள் (முன்பு) பாம்புகளைக் கொன்று வந்தார்கள். ஆனால், வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருந்தார்கள் என்று அபூலுபாபா (ரழி) அவர்கள் இப்னு உமர் (ரழி) அவர்களுக்கு அறிவித்தபோது, அவர் (இப்னு உமர் (ரழி) அவர்கள்) அவற்றைக் கொல்வதை விட்டுவிட்டார்கள்.
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا نَافِعٌ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ
يَقْتُلُ الْحَيَّاتِ كُلَّهُنَّ حَتَّى حَدَّثَنَا أَبُو لُبَابَةَ بْنُ عَبْدِ الْمُنْذِرِ الْبَدْرِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ الْبُيُوتِ فَأَمْسَكَ .
நாஃபிவு அவர்கள் அறிவித்தார்கள்: இப்னு உமர் (ரழி) அவர்கள், அபூலுபாபா பின் அப்துல் முன்திர் அல் பத்ரீ (ரழி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுப் பாம்புகளைக் கொல்வதைத் தடை செய்திருந்தார்கள்’ என்று அறிவிக்கும் வரையில் எல்லா வகையான பாம்புகளையும் கொன்று வந்தார்கள், அதனால் அவர்கள் அதிலிருந்து விலகிக்கொண்டார்கள்.