حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ بِئْرِ مَعُونَةَ ثَلاَثِينَ غَدَاةً، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ أَنَسٌ أُنْزِلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ قُرْآنٌ قَرَأْنَاهُ ثُمَّ نُسِخَ بَعْدُ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிஃர் மஊனா (தோழர்களைக்) கொன்றவர்களுக்கு எதிராக முப்பது காலைப் பொழுதுகளில் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்த ரிஅல், தக்வான் மற்றும் உஸய்யா (ஆகிய குலத்தார்) மீது (அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்).
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: பிஃர் மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் குறித்து குர்ஆன் (வசனம்) அருளப்பட்டது; அதை நாங்கள் ஓதி வந்தோம்; பின்னர் அது (ஓதப்படுவது) நீக்கப்பட்டுவிட்டது.
(பொருள்: "நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம்; அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக்குறித்துத் திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாருக்குத் தெரிவியுங்கள்.")
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'பிஃரு மஊனா' தோழர்களைக் கொன்றவர்களுக்கு எதிராக முப்பது காலைகள் (தொழுகையில்) பிரார்த்தித்தார்கள். ரிஃல், தக்வான், லிஹ்யான் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்த உஸய்யா ஆகியோருக்கு எதிராக அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
மேலும் அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் குறித்து அல்லாஹ் (குர்ஆன்) வசனம் ஒன்றை அருளினான். பின்னர் அது (ஓதப்படுவது) மாற்றப்படும் வரை நாங்கள் அதை ஓதிவந்தோம். (அது வருமாறு):
(இதன் பொருள்: "எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்! நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். அவன் எங்களைக் கொண்டு திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் கொண்டு திருப்தியடைந்தோம்.")