ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளான "அவர்கள் உங்களுக்கு மேலிருந்தும் உங்களுக்குக் கீழிருந்தும் உங்களிடம் வந்த போதும், பார்வைகள் நிலைகுத்தி நின்ற போதும், இதயங்கள் தொண்டைகளை அடைந்த போதும்" (33:10) என்பவை அகழ் போர் தினத்தைப் பற்றியவை ஆகும் என்று அறிவித்தார்கள்.