"ஹுதைபிய்யா தினத்தன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: 'இன்று பூமியில் உள்ளவர்களில் நீங்களே சிறந்தவர்கள்.' மேலும் ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'எனக்குப் பார்வை இருந்திருந்தால், அந்த மரத்தின் இடத்தை நான் உங்களுக்குக் காட்டியிருப்பேன்.'"