நான் ஸலமா (ரழி) அவர்களின் கெண்டைக்காலில் ஒரு காயத்தின் அடையாளத்தைக் கண்டேன். நான், “இது என்ன?” என்று கேட்டேன். அவர் பதிலளித்தார்கள்: நான் காயமடைந்தேன். கைபர் தினத்தன்று எனக்கு அந்த காயம் ஏற்பட்டது. மக்கள், “ஸலமா காயமடைந்துவிட்டார்” என்று கூறினார்கள். பின்னர் நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என் மீது மூன்று முறை ஊதினார்கள். இன்றுவரை நான் எந்த வலியையும் உணரவில்லை.