حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ أَصَابَتْنَا مَجَاعَةٌ لَيَالِيَ خَيْبَرَ، فَلَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ وَقَعْنَا فِي الْحُمُرِ الأَهْلِيَّةِ، فَانْتَحَرْنَاهَا فَلَمَّا غَلَتِ الْقُدُورُ، نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اكْفَئُوا الْقُدُورَ، فَلاَ تَطْعَمُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا. قَالَ عَبْدُ اللَّهِ فَقُلْنَا إِنَّمَا نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم لأَنَّهَا لَمْ تُخَمَّسْ. قَالَ وَقَالَ آخَرُونَ حَرَّمَهَا الْبَتَّةَ. وَسَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ فَقَالَ حَرَّمَهَا الْبَتَّةَ.
இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கைபர் (போர்) இரவுகளில் எங்களுக்குப் பசி ஏற்பட்டது. கைபர் போர் நாளன்று எங்களுக்கு நாட்டுக்கழுதைகள் கிடைத்தன. நாங்கள் அவற்றை அறுத்தோம். (இறைச்சி சமைப்பதற்காகப்) பானைகள் கொதித்துக் கொண்டிருந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் ஒருவர், 'பானைகளைக் கவிழ்த்துவிடுங்கள்! (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியிலிருந்து எதையும் உண்ணாதீர்கள்' என்று அறிவித்தார்."
(அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் கூறினார்: "அவற்றிலிருந்து 'குமுஸ்' எடுக்கப்படாததாலேயே நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தார்கள் என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக்கொண்டோம். வேறு சிலரோ, 'இல்லை, அவற்றை முற்றாகவே நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கிவிட்டார்கள்' என்று கூறினர்."
(ஷைபானி ஆகிய நான்) இது குறித்து சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் அதை முற்றாகவே ஹராமாக்கிவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அபூ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“கைபர் (போர் நடந்த) இரவுகளில் எங்களுக்குக் கடும் பசி ஏற்பட்டது. கைபர் நாளன்று எங்களுக்கு நாட்டுக் கழுதைகள் கிடைத்தன. அவற்றை நாங்கள் அறுத்தோம். அப்பானைகள் (இறைச்சியுடன்) கொதித்துக் கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘பானைகளைக் கவிழ்த்து விடுங்கள்; நாட்டுக் கழுதைகளின் இறைச்சியிலிருந்து எதையும் உண்ணாதீர்கள்’ என்று அறிவித்தார். (இதைக் கேட்ட) மக்களில் சிலர், ‘போர்ச் செல்வத்தில் ஐந்தில் ஒரு பங்கு (கும்ஸ்) பிரிக்கப்படாததால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடுத்தார்கள்’ என்று கூறினர். வேறு சிலர், ‘அவர்கள் அதை அடியோடு தடுத்தார்கள்’ என்று கூறினர்.”
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ، فَقَالَ أَصَابَتْنَا مَجَاعَةٌ يَوْمَ خَيْبَرَ وَنَحْنُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَقَدْ أَصَابَ الْقَوْمُ حُمُرًا خَارِجًا مِنَ الْمَدِينَةِ فَنَحَرْنَاهَا وَإِنَّ قُدُورَنَا لَتَغْلِي إِذْ نَادَى مُنَادِي النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنِ اكْفَئُوا الْقُدُورَ وَلاَ تَطْعَمُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا . فَأَكْفَأْنَاهَا . فَقُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى حَرَّمَهَا تَحْرِيمًا قَالَ تَحَدَّثْنَا أَنَّمَا حَرَّمَهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَلْبَتَّةَ مِنْ أَجْلِ أَنَّهَا تَأْكُلُ الْعَذِرَةَ .
அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நான் அப்துல்லாஹ் இப்னு அபீஅவஃபா (ரழி) அவர்களிடம் வீட்டுக் கழுதைகளின் இறைச்சி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
‘கைபர் நாளில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அப்போது) எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் மதீனாவிற்கு வெளியே சில கழுதைகளைப் பிடித்திருந்தனர். நாங்கள் அவற்றை அறுத்து (சமைத்தோம்). எங்கள் பாத்திரங்கள் கொதித்துக் கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், “பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள்; கழுதைகளின் இறைச்சியிலிருந்து எதையும் உண்ணாதீர்கள்” என்று அறிவித்தார். உடனே நாங்கள் அவற்றை கவிழ்த்துவிட்டோம்.’
நான் (அப்துல்லாஹ் அவர்களிடம்), ‘நபி (ஸல்) அவர்கள் அதை (நிரந்தரமாகத்) தடுத்துவிட்டார்களா?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ‘அவை அசுத்தத்தை உண்பதன் காரணமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதனை அடியோடு தடை செய்தார்கள் என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக்கொண்டோம்’ என்று கூறினார்கள்.”