முஜாஷிஃ இப்னு மஸ்ஊத் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் செய்வதற்காக பைஅத் அளிக்க வந்தேன். அதற்கு அவர்கள், "நிச்சயமாக ஹிஜ்ரத் அதன் உரியவர்களுடன் சென்றுவிட்டது (முடிந்துவிட்டது). எனினும் இஸ்லாம், ஜிஹாத் மற்றும் நன்மையின் மீது (பைஅத் செய்வீராக)" என்று கூறினார்கள்.