حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا وَفِي الْبَيْتِ مُخَنَّثٌ، فَقَالَ الْمُخَنَّثُ لأَخِي أُمِّ سَلَمَةَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكُمُ الطَّائِفَ غَدًا أَدُلُّكَ عَلَى ابْنَةِ غَيْلاَنَ، فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَدْخُلَنَّ هَذَا عَلَيْكُنَّ .
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தபோது, வீட்டில் பெண் தன்மையுடைய ஒருவர் இருந்தார். அவர் உம்மு ஸலமாவின் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யாவிடம், "அல்லாஹ் நாளை தாயிஃபை உங்களுக்கு வெற்றி கொள்ளச் செய்தால், ஃகைலானின் மகளை உமக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். ஏனெனில் அவள் (முன்புறம்) வரும்போது நான்கு (சதை) மடிப்புகளுடனும், (பின்புறம்) செல்லும்போது எட்டு மடிப்புகளுடனும் வருகிறாள்" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர் (இனி) உங்களிடம் பிரவேசிக்கக் கூடாது" என்று கூறினார்கள்.
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தபோது, (வீட்டில்) ஒரு முகன்னத் இருந்தார். அவர் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் சகோதரர் அப்துல்லாஹ்விடம், "அப்துல்லாஹ்வே! நாளை உங்களுக்குத் தாயிஃப் வெற்றி கொள்ளப்பட்டால், நான் உனக்கு கைலானின் மகளை அடையாளம் காட்டுகிறேன். ஏனெனில், அவள் (வரும்போது) நான்கு (மடிப்பு)களுடனும், (செல்லும்போது) எட்டு (மடிப்பு)களுடனும் தென்படுவாள்" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர்கள் உங்களிடம் (பெண்களிடத்தில்) நுழையக் கூடாது" என்று கூறினார்கள்.
அபு அப்தில்லாஹ் (புகாரி) கூறுகிறார்: ‘நான்குடன் வருகிறாள், எட்டுடன் செல்கிறாள்’ என்பது அவளது வயிற்றின் நான்கு மடிப்புகளைக் குறிக்கிறது; அவள் வரும்போது அவற்றுடன் வருகிறாள். ‘எட்டுடன் செல்கிறாள்’ என்பது அந்த நான்கு மடிப்புகளின் ஓரங்களைக் குறிக்கிறது. ஏனெனில் அவை இரு பக்கங்களிலும் சூழ்ந்துள்ளன. அவர் (எட்டு என்பதற்கு) ‘ஸமானியத்’ என்று கூறாமல் ‘ஸமான்’ என்றே குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் (மடிப்புகளின்) ஓரங்கள் (அத்ராஃப்) என்பதன் ஒருமை ஆண்பாலாகும்; அவர் ‘ஸமானியத் அத்ராஃப்’ என்று குறிப்பிடவில்லை.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் பெண் தன்மையுடைய ஒருவர் (முகன்னத்) இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டில் இருந்தார்கள். அந்த நபர் உம்மு ஸலமாவின் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யாவிடம், "அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் மீது அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை அளித்தால், நான் உமக்கு ஃகைலானின் மகளைக் காட்டுகிறேன். ஏனெனில் அவள் (தன் உடலப்பருமனால்) முன்புறம் நான்கு (மடிப்புகளுடனும்), பின்புறம் எட்டு (மடிப்புகளுடனும்) வருகிறாள்" என்று கூறினார். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றபோது, "இவர்கள் உங்களிடம் (பெண்களிடம்) நுழையக் கூடாது" என்று கூறினார்கள்.
حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ مُخَنَّثًا، كَانَ عِنْدَ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم . فَقَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْمَعُ يَا عَبْدَ اللَّهِ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكُمُ الطَّائِفَ غَدًا فَأَنَا أَدُلُّكَ عَلَى ابْنَةِ غَيْلاَنَ فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَدْخُلَنَّ هَؤُلاَءِ عَلَيْكُمْ .
நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரழி) அவர்களிடத்தில் பெண் தன்மையுடைய ஒருவர் இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு பேசுவதைக்) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நபர் அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யாவிடம், "அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் மீது அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை அளித்தால், கைலானுடைய மகளிடம் நான் உங்களை அழைத்துச் செல்வேன். ஏனெனில் அவள் நான்கு (மடிப்புகளுடன்) வருகிறாள்; எட்டு (மடிப்புகளுடன்) செல்கிறாள்" என்று கூறினார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர்கள் உங்களிடத்தில் நுழையவே கூடாது" என்று கூறினார்கள்.