இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4426ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، يَقُولُ أَذْكُرُ أَنِّي خَرَجْتُ مَعَ الْغِلْمَانِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ نَتَلَقَّى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ سُفْيَانُ مَرَّةً مَعَ الصِّبْيَانِ‏.‏
அஸ்-ஸாயிப் பின் யஸீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் சிறுவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக தனியத்துல் வதாஃ என்னும் இடத்திற்குச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2779சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ مِنْ غَزْوَةِ تَبُوكَ تَلَقَّاهُ النَّاسُ فَلَقِيتُهُ مَعَ الصِّبْيَانِ عَلَى ثَنِيَّةِ الْوَدَاعِ ‏.‏
அல் ஸாயிப் பின் யஸீத் (ரழி) அவர்கள் கூறினார்கள், “நபி (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து மதீனாவிற்குத் திரும்பி வந்தபோது, மக்கள் அவர்களை வரவேற்றனர், நான் சிறுவர்களுடன் சேர்ந்து தநிய்யத்துல் வதா எனும் இடத்தில் அவர்களைச் சந்தித்தேன்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)