حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ زَيْدٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ بِعَرَفَاتٍ. تَابَعَهُ ابْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو.
ஜாபிர் இப்னு ஸைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் அரஃபாத் (மைதானத்தில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்' என்று சொல்ல நான் கேட்டேன்.
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ أَبِي الشَّعْثَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஹ்ரிமாக இருந்த நிலையில் (அதாவது, ஹஜ் அல்லது உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்திருந்த நிலையில்) மைமூனா (ரழி) அவர்களை மணமுடித்தார்கள்.