இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3243சுனனுந் நஸாயீ
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ سَمِعْتُ نَافِعًا، يُحَدِّثُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَلاَ يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ الرَّجُلِ حَتَّى يَتْرُكَ الْخَاطِبُ قَبْلَهُ أَوْ يَأْذَنَ لَهُ الْخَاطِبُ ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறிவந்தார்கள்:
'உங்களில் ஒருவர் (மற்றொருவருடன்) ஒரு வியாபாரத்தை (விலை பேசி) முடித்திருக்கும்போது, அதன் மீது (அதே பொருளை) மற்றவர் வியாபாரம் செய்வதையும், ஒருவர் பெண் கேட்டிருக்கும்போது - அதற்கு முன்பு பெண் கேட்டவர் அதை விட்டுவிடும் வரை அல்லது அவர் இவருக்கு அனுமதியளிக்கும் வரை - மற்றவர் பெண் கேட்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)