حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ وَلَوْ شِئْتُ أَنْ أَقُولَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَكِنْ قَالَ السُّنَّةُ إِذَا تَزَوَّجَ الْبِكْرَ أَقَامَ عِنْدَهَا سَبْعًا، وَإِذَا تَزَوَّجَ الثَّيِّبَ أَقَامَ عِنْدَهَا ثَلاَثًا.
அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"(இதை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நான் சொல்ல விரும்பினால் (அவ்வாறு) சொல்லியிருக்கலாம். ஆனால், (நபி)வழிமுறை என்னவென்றால், ஒருவர் ஒரு கன்னிப் பெண்ணை மணமுடித்தால் அவரிடம் ஏழு நாட்கள் தங்க வேண்டும்; ஒரு கன்னி அல்லாத பெண்ணை மணமுடித்தால் அவரிடம் மூன்று நாட்கள் தங்க வேண்டும்."