``உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
(அந்நியப்) பெண்களிடம் தனிமையில் பிரவேசிப்பதை விட்டும் உங்களை எச்சரித்துக் கொள்ளுங்கள். அன்சாரிகளில் ஒருவர் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே (ஸல்), கணவரின் சகோதரர் குறித்து என்ன (நிலை)? அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: கணவரின் சகோதரர் மரணத்திற்கு ஒப்பானவர்.``