أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ، ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ثَابِتُ بْنُ قَيْسٍ أَمَا إِنِّي مَا أَعِيبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الإِسْلاَمِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ " . قَالَتْ نَعَمْ . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْبَلِ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً " .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஸாபித் பின் கைஸ் (ரழி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதரே, ஸாபித் பின் கைஸ் (ரழி) அவர்களின் நடத்தை அல்லது மார்க்கப் பற்றுதல் சம்பந்தமாக நான் எந்தக் குறையையும் காணவில்லை, ஆனால் இஸ்லாத்தில் (இருந்துகொண்டு கணவனுக்கு) நன்றி கெட்டவளாக (அல்லது அவரது உரிமைகளை நிறைவேற்றாதவளாக) இருப்பதை நான் வெறுக்கிறேன்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவாயா?" என்று கூறினார்கள்.
அதற்கு அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஸாபித் பின் கைஸிடம்) தோட்டத்தைப் பெற்றுக்கொண்டு, அவளை ஒரு தலாக் கூறிவிடு" என்று கூறினார்கள்.