இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5281ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ذَاكَ مُغِيثٌ عَبْدُ بَنِي فُلاَنٍ ـ يَعْنِي زَوْجَ بَرِيرَةَ ـ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَتْبَعُهَا فِي سِكَكِ الْمَدِينَةِ، يَبْكِي عَلَيْهَا‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அவர், இன்னாருடைய பனூ கிளையைச் சேர்ந்த ஓர் அடிமையும், பரீரா (ரழி) அவர்களின் கணவருமான முஃகீஸ் ஆவார். அவரை மதீனாவின் தெருக்களில் பரீரா (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து செல்வதை நான் இப்போது என் கண்முன்னே பார்ப்பது போலத்தான் இருக்கிறது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح